இதுவரையில் நடத்தி வந்தீரே
உமக்கு நன்றி கூறுவேன்
கன்மலை மேல் உயர்த்தி வைத்தீரே –
உம்மை புகழ்ந்து பாடுவேன் (2)
நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை
கீதங்கள் பாட புது இராகமும் இல்லை (2)
1. கேருபீன்கள் சூழ இருப்பவர்
என்னைச்சுற்றி உம் கண்கள் வைத்திருந்தீர்
சேரக்கூடா ஒளியில் வசிப்பவர்
பாவி எந்தன் இதயம் உள்ளிருந்தீர் (2 )
2. விக்கினங்கள் நெருக்கி சூழ்கையில்
வேந்தன் அன்பாய் அருகில் வந்தமர்ந்தீர்
சத்துருக்கள் மேற்கொள்ள வருகையில்
வல்லமையாய் எழுந்து முன் நடந்தீர் (2 )
3. நம்பினவர் கைவிட்டு பிரிகையில் –
நான் இருக்கிறேன் பயப்படாதே என்றீர்
தனிமையில் அழுத நேரங்களில் –
ஒரு தாயைப்(தந்தை)போல அள்ளி அணைத்துக்கொண்டீர்
நன்றி நன்றி இராஜா நன்றி இயேசுவே
நன்றி நன்றி இராஜா நன்றி இயேசுவே (4)