துதிப் பாடல்கள்

இதுவரை நடத்தி வந்த எபிநேசரே

Idhuvarai Nadathi Vandha Ebinesarae

இதுவரை நடத்தி வந்த எபிநேசரே இம்மட்டும் கூட இருந்த இம்மானுவேலே -2

தகப்பன் பிள்ளையை தோளில் சுமப்பது போல்

சுமந்து வந்தவரே

தாயினும் மேலாய் போஷித்து காத்து வந்தவரே-2

கிருப கிருப கிருப -3

பதினைந்து ஆண்டுகளாய் (நடத்தி வந்தீர்) -2

பதினாயிரங்களில் சிறந்தவரே-2 சிறியவனாகிய ஆகிய என்னை (சின்னவனாகிய)

அரியணை ஏற்றும் தெய்வமே -2

என் மேன்மையை விரும்பாத மனிதர் முன்னே -உம் மகிமையை வெளியரங்கமாக்கினவர் -2

என் சத்துரு கண் பார்த்திட

என் மேன்மையை பெருகப்பண்ணினார்-2

ஆரோனை போல் அழைத்து வந்தவரே பார்வோனின் சேனைகளை முடித்திடவே -2

ஆயிரம் ஆயிரம் ஜனம் கண்டு -நான் ஆவியில் களி கூறுவேன் -2

என்னை குழியல் போட்ட மனிதருக்குள் என்னை உமது விழியில் வைத்து கொண்டவரே -2

ஆகாத கல்லானவனை

ஆதாரக் கல்லாக்கினீர்-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு