துதிப் பாடல்கள்

இடைவிடாமல் நன்றி சொல்லி

Idaividaamal Nandri Solli

இடைவிடாமல் நன்றி சொல்லி

இயேசுவைத் துதிப்பேன்

அவர் செய்த நன்மைகளை நினைத்து

நாள்தோறும் தொழுதிடுவேன்

ஒரு தாயைப்போல என்னை சுமந்தார்

ஒரு தந்தைபோல என்னை அணைத்தார்

என்னை கண்மணிபோல் காத்தார் .

என் இயேசுவை துதித்திடுவேன்

என் வியாதியிலே சுகம் தந்ததர் -

மரணப் படுக்கையை மாற்றி போட்டார்

நித்தம் புதுபெலன் எனக்கு தந்தார்

என் இயேசுவை துதித்திடுவேன்

நான் கதறி அழுத போதெல்லாம்

என் அருகினில் ஓடி வந்தார்

என்னை மார்போடு அணைத்துக்கொண்டார்

என் இயேசுவைத் துதித்திடுவேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு