துதிப் பாடல்கள்

இடைவிடாமல் ஜெபம் செய்வோம்

Idaividaamal Jebam Seyvom

இடைவிடாமல் ஜெபம் செய்வோம்

இதயத்தை அவரிடம் கொடுப்போம்

வல்மையின் ஆவியால் நிரம்பி

நல்லவர் இயேசுவிடம் பேசி மகிழ்வோம் -இடைவிடாமல்

1. ஜெபிப்பது இன்பமானது உதவியே -உடன் வந்திடும்

துன்பங்கள் யாவும் பறந்து போகும்

தூயவரிடம் நாம் ஜெபிப்பதால் -இடைவிடாமல்.

2 சத்துரு உன்னை மேற்கொள்ளும் போது

சோர்வில்லாமல் ஜெபித்திடு

வஞ்சகன் உன்னை விட்டு ஒடி போவான்

வார்த்தையில் நிறைந்து ஜெபித்திடு -இடைவிடாமல்.

3. கண்ணீரும் கவலையும் சூழ்ந்த நேரம்

கருத்தாய் அவரிடம் ஜெபித்திடு

நிந்தனை வேதனை அனைத்தும் அகற்றுவார்

நித்திய ராஜனிடம் ஜெபித்திடு. -இடைவிடாமல்.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு