எழுப்புதல் வாசனை வீசுதே - நம் தேசத்தில்
அக்கினி போல பரவுதே நம் - தாய் மண்ணில்
1.சபைகள் விழித்து ஜெபித்திடும்
சர்வாயுத வர்க்கம் தரித்திடும் (2)
எங்கும் சமாதானம் பெருகிடும் (2)- எழுப்புதல்
2.சீஷர்களால் எங்கும் நிரப்பிடும்
ஆத்தும பாரத்தை ஊற்றிடும் (2)
எங்கும் அறுவடை மிகுந்திடும்- எழுப்புதல்
3.கர்த்தரின் வருகை நெருங்குதே
எக்காள சத்தம் முழங்குதே (2)
நாம் மறுரூபம் ஆவோமே- எழுப்புதல்