துதிப் பாடல்கள்

எழுந்து வாரும் இயேசுவே

Ezhundhu Vaarum Yesuvae

எழுந்து வாரும் இயேசுவே இந்த

ஏழையின் ஜெபம் கேட்டு... - 2

பாவ வாழ்வை வெறுத்திட்டேன்

நேசர் முகம் காண... - 2

சாரோனின் ரோஜா நீரல்லவோ

லீலிபுஸ்பமும் ஆனவரே... - 2

நீர் ரூபமுள்ளவர் என் நேசர்

இன்ப மதுரம் ஆனவரே... - 2

ஆவியின் வரங்கள் தந்தருள்வீர்

கனிகள் நிறைந்து கண்டிடவே... - 2

பின்மாரி மழையை ஊற்றிடுமே

ஜீவ நதியாய் பாய்ந்திடவே... - 2

உலகின் முடிவும் நீர் வருவீர்

இனிய நண்பரும் ஆனவரே... - 2

என்றும் கைவிடாதவர் என் இயேசு

ஆத்ம நேசரும் ஆனவரே... - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு