ஏசுவின் பேழைக்குள்ளே
நாங்கள் இருக்கிறோம்
ஏசுவின் குடும்பமாய் ஆராதிப்போம்
1. ஏசுவின் பேழைக்குள்ளே கவலை இல்லையே
ஏசுவின் பேழைக்குள்ளே கண்ணீர் இல்லையே
ஏசுவின் பேழைக்குள்ளே துக்கம் இல்லையே
ஏசுவின் பேழைக்குள்ளே மகிழ்ச்சி மகிழ்ச்சியே
2. ஏசுவின் பேழைக்குள்ளே தோல்வி இல்லையே
ஏசுவின் பேழைக்குள்ளே வெற்றி வெற்றியே
ஏசுவின் பேழைக்குள்ளே குழப்பம் இல்லையே
ஏசுவின் பேழைக்குள்ளே மகிழ்ச்சி மகிழ்ச்சியே
3. ஏசுவின் பேழைக்குள்ளே நீயும் வந்திடு
ஏசுவுக்காக அனுதினமும் உழைத்திடலாம்
ஒருமனம் ஒற்றுமை ஒரே சிந்தையாய்
ஏசுவின் ராஜ்ஜியத்தில் செயல்படுவோம் நாம்
4. கிராமம் எல்லாம் வீதி எல்லாம் செல்ல வேண்டும்
அழிந்து போகும் ஆத்துமாவை மீட்க வேண்டும்
கல்வாரி அன்பையே சொல்ல வேண்டும்
இந்தியாவை பேழைக்குள்ளே சேர்க்க வேண்டும்.