துதிப் பாடல்கள்

எப்போது எப்போதுன்னு

Eppodhu Eppodhunnu

எப்போது எப்போதுன்னு காத்து கிடந்த மனசு

சத்தியத்தை பித்து புடிச்சு

தேடுன அந்த உசுரு

எப்போது கனி கொடுப்பேன்னு காத்து கடந்த மனசு

சத்தியத்தை பித்து பிடிச்சு தேடுன அந்த உசுரு

நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம் வீணா போகவில்லை

நான் விதைச்ச எல்லாம் தரிசா மாறவில்லை -2

1. சொப்பனங்கள் கண்டவனை காசுக்கு விற்றவனை

ஊரறிய அழகு பார்த்து அலங்கரித்தீரே

குடும்பங்கள் சேர்ந்து கொண்டு

குழியிலே தள்ளினாலும்

ஊருக்கு முன் முத்தமிட்டு

அணைத்துக் கொள்பவரே

நீர் செய்தத நெனச்சு

நன்றி சொல்லுது மனசு

எத்தனையோ பாட்டிருந்தும்

மனசு பாடுது புதுசு-நான் ஜெபிச்ச

2. திக்கி திக்கி பேசும் என்னை

மந்த நாவை கொண்டவனை

ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கினீர்

அழைப்பே இல்லை என்று

அழைத்துச் சொன்னவர் முன்

அரியணை கொடுத்து

என்னை அரசனாக்கினீர்

நீர் மட்டும் இல்லனா

என்ன நான் செஞ்சிருப்பேன்

எத்தனையோ பேர நம்பி

ஏமாந்து போயிருப்பேன்!- நான் ஜெபிச்ச

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு