எப்படியும் வாழலாம் என்பதல்ல கிறிஸ்தவம்
இயேசு சொன்ன படி வாழ்வதே
உண்மயுள்ள கிறிஸ்தவம்-2
உன்னில் இயேசுவை உலகம்
காண வேண்டும் உண்மையுள்ள
கிறிஸ்தவனாய் என்றும் நீ வாழவேண்டும்-2
வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் நீ வாழவேண்டும்
மரித்தாலும் இயேசுவுக்காய் நீ மரிக்க வேண்டும்-2
கொலை கொள்ளை பட்டியலில்
கிறிஸ்தவன் பேரு
இதற்காகத்தானா இயேசு மரித்தாரு
பணக்காரர் பட்டியலில்
கிறிஸ்தவன் பலபேரு பரலோகம்
இவர்கள் போவதில்லை பாரு-2
பேருக்கு கிறிஸ்தவனாய் என்றும் இருக்காதே
ஜீவ புஸ்தகத்தில் உன் பேரும் இருக்காதே
உருவ வழிபாடு செய்பவர்கள் கிறிஸ்தவரா
வேதம் சொல்லுது உன் முடிவு பரிதாபம்-2
பிழைப்பிற்காக நீ ஊழியம் செய்யாதே
அழைப்பிற்காக நீ ஊழியம் செய்திடு
ஊழியம் என்ற பேரில் அட்டூழியம் செய்யாதே
உண்மயுள்ள ஊழியனின் பேரையும் கெடுக்காதே-2
பிதாவின் சித்தப்படி செய்பவனே அல்லாமல்
பரலோகம் ஒருவரும் போக முடியாதே
கர்த்தாவே என்றாலும் கதவை சாத்திடுவார
கதறி அழுதாலும் கண்டுகொள்ள மாட்டாரே-2