என்னுயிரே பாடிப் போற்றிடுவேன்
உள்ளம் பொங்கத் துதித்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2)
1. எந்தன் உயிர் தெய்வம் நீர்தானே
எந்தன் வாழ்வின் ஒளியும் நீர்தானே
எந்தன் ஜீவப் பாதையும் நீர்தானே
எந்தன் அன்பின் உறைவிடம் நீர்தானே -அல்லேலூயா
2. கானகப்பாதை கடும் வெயிலில்
கருத்தாய் என்னை நடத்தினீரே
கரம் பிடித்து தினம் வழி நடத்தி
கண்மணி போல் என்னைக் காத்திரே -அல்லேலூயா
3. நீர் செய்த நன்மைகளை நினைத்து
நிதம் உம்மைப் பணிந்தே
தொழுதிடுவேன்
நாதனே உம்பாதம் சரணடைந்து
நன்றியுடன் சொல்வேன் ஸ்தோத்திரங்கள் - அல்லேலூயா
4. அனுதினம் என்னைப் போஷிக்கிறீர்
அனைத்தையும் தந்து நடத்துகின்றீர்
அரணும் கோட்டையுமாயிருந்து
அடைக்கலம் தந்து காக்கின்றீர்-அல்லேலூயா
5. உம்முடனே நான் மகிழ்ந்திடுவேன்
உம்மைப் பாடி can புகழ்ந்திடுவேன்
உம்வழி தினமும் நடந்திடுவேன்
உம்குரல் கேட்டுப் பின்தொடர்வேன்.