துதிப் பாடல்கள்

என்னில் அன்பு கூர்ந்தீரே

Ennil Anbu Koorndheerae

என்னில் அன்பு கூர்ந்தீரே

என்னை அணைத்து மகிழ்ந்தீரே (அரவணைத்தீரே)

என்னை தோளில் சுமந்தீரே

என்னை காத்து நடத்துனீரே - 2

நன்றி நன்றி என்று சொல்லுவேன்

நன்றி நன்றி என்று பாடுவேன்

நன்றி நன்றி என்று துதிப்பேன்

நன்றி நன்றி என்று உயர்த்துவேன்

1 . என் குற்றம் எல்லாமே சிலுவையில் சுமந்தீரே

உமக்கான வெற்றியை எனக்கு தந்தீரே - 2

என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீர்

என் சாபங்கள் அனைத்தையும் முறித்தீர்

எனக்காக யாவையும் செய்திட்டீர்

அதிகாரம் யாவையும் கொடுத்தீர்

2 . பெலவீனம் எல்லாமே பெலனாய் மாறியதே

குறைவுடன் இருந்ததெல்லாம் நிறைவாய் மாறியதே - 2

என்னை கரம் பிடித்து நடத்தினீர்

என்னை தீங்குக்கெல்லாம் விலக்கினீர்

என் கால்கள் இடறாமல் காத்திட்டீர்

என்னை உள்ளங்கையில் வரைந்திட்டீர்

3. தலைகுனிந்த இடங்களிலெல்லாம் தலையை உயர்த்தினீரே

சோர்வுற்ற நேரங்களெல்லாம் தேற்றி உதவினீரே -2

உம வார்த்தையால் என்னை உயிர்ப்பித்தீர்

உம ஆவியால் என்னை நிரப்பினீர்

உம ரத்தத்தால் என்னை மூடினீர்

உம கிருபையால் என்னை சூழ்ந்திட்டீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு