என்னென்ன நேர்ந்தாலும் உம்மையே நம்புவேன்
நீர்மட்டும் போதுமே என் வாழ்விலே
கூப்பிட்ட நேரம் குரல்தனை கேட்டு
பதில்தனை தருகின்றீர் பிரியமுடனே
நீரே என்னை அழைத்தீர்
நீரே தெரிந்தும் கொண்டீர்
வாழ்கின்ற ஒர் வாழ்வு உமக்காக வாழவே
அநாதி அன்பினால் முன்குறித்தீர்
நீர் என் பக்கம் இருக்க
எதை கண்டும் கலங்குவேனோ
பாதங்கள் கல்லினில் இடறாமல் காத்து
நெருப்பையும் நீரையும் கடக்கச் செய்வீர்