துதிப் பாடல்கள்

என்னென்று சொல்வேன்

Ennendru Solven

என்னென்று சொல்வேன், எங்கு நான் செல்வேன்

கர்த்தாவின் பேரன்பை விட்டு - (2)

நான் பெற்ற அன்பு எத்தனை அதிகம் - (2)

கர்த்தாவின் இணையற்ற அன்பு - என்னென்று

காலையும் மாலையும் கருத்தினில் நிற்கும்

கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு-(2)

நினைவிலும் கனவிலும் நீங்காது நிற்கும் - (2)

கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு - என்னென்று

மண்ணில் பிறந்து மண்ணோடு போகும்

மனிதர்க்கு ஏன் இந்த அன்பு - (2)

மதிப்பிற்கு உரியோர், மகிமைக்கு உரியோர் - (2)

என்பதே கர்த்தாவின் தீர்ப்பு - என்னென்று

பார்வோனின் அடிமைகள் கண்டதோர் வெற்றி

உலகத்தின் மனிதர்கள் பெற்றார் - (2)

பாவத்தில் வெற்றி மரணத்தில் வெற்றி - (2)

ஏற்பவர் அனைவர்க்கும் வெற்றி - என்னென்று

அன்பிற்கு ஏங்கும் உள்ளங்கள் உண்டோ

இயேசுவின் அன்பை போல் உண்டோ - (2)

முகம்பார்த்து அல்ல அகம் பார்க்கும் அன்பு - (2)

அனைவர்க்கும் உரித்தான அன்பு - என்னென்று

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு