என்னை வாழவைக்கும் ஏசு ராஜா
உம்மை எந்நாளும் பாடிடுவேன்
ஆடியே பாடியே அல்லேலூயா
பாடியே வெற்றி மேலே வெற்றி பெறுவேன்
1. கோலியாத் எதிர்த்து வந்தாலும்
வீரமுடன் முன்னே செல்லுவேன்
கர்த்தரின் பட்டயம் என்னுடைய பட்டயம்
வெற்றி மேலே வெற்றி பெறுவேன் டும்
2. செங்கடல் எதிர்த்து வந்தாலும்
வீரமுடன் கடந்து செல்லுவேன் அல்லேலூயா
பாடியே அலைகளை தாண்டியே
வெற்றி மேலே வெற்றி பெறுவேன்
3. உலகமெங்கும் சென்றிடுவோம்
வாலிபரை சீஷராக்குவோம்
ஏசுவின் சேணையில் நல்ல போர் சேவகனாய்
வெற்றி மேலே வெற்றி பெறுவேன்