என்னை கர்ப்பத்திலே
காதலித்த காதல் கர்த்தாவே-2
எந்தன் இதயத்தை கொள்ளை கொண்ட
உந்தன் காதல் நான் தானே-2
எனக்காக இறங்கி வந்த என் மணவாளன் நீர் தானே
உமக்காக வாழ்வேனே கற்புள்ள கன்னிகையாக....
முத்தங்கள் தினமும் உமக்குத் தந்து
என்னை முழுவதுமே உமக்கு தந்து-2
உந்தன் குரல் தினம் கேட்டு
அதன்படி தினம் நான் நடந்து-2
உமக்காக வாழ்வேனே கற்புள்ள கன்னிகையாக
எந்தன் முன்னே உம்மை வைத்து
உலகை எந்தன் பின்னே வைத்து-2
என்னை தினம் நான் வெறுத்து
உம்மை அதிகமாய் நான் நேசித்து-2
உமக்காக வாழ்வேனே கற்புள்ள கன்னிகையாக
என் ஆஸ்தி எல்லாம் கொள்ளையிட
சந்தோசமாய் நான் தந்து-2
லாபமான அனைத்தையுமே
உமக்காய் நஷ்டமாய் நான் நினைத்து-2
வருவேனே உந்தன் பின்னால் சிலுவையே நான் சுமந்து
நீர் வரும் நாளை எதிர்பார்த்து தினம்
உமக்காக நான் காத்திருந்து-2
சகலத்தையும் நான் சகித்து உந்தன
சாட்சியாய் நான் வாழ்ந்து-2
வருவேனே உந்தன் பின்னால் சிலுவையை நான் சுமந்து