துதிப் பாடல்கள்

என்னை காண்கின்ற

Ennai Kaangindra

என்னை காண்கின்ற

வல்லமை தேவா

உம்மை பாடி துதித்திடுவேன்

பாடி துதித்திடுவேன்

பாரில் உள்ள நாளெல்லாம்

1. வானத்தில் ஏறி பறந்தாலும்

பாதாளம் சென்று படுத்தாலும்

உம்மை விட்டு எங்கே ஓடுவேன்

என்னை காணும் தேவன் நீரே.

2. நடக்கையும் படுக்கையும் சூழ்ந்துள்ளீர்

உட்கார்ந்து எழுதலை அறிந்துள்ளீர்

என் நினைவுகள் அறிபவரே

என்னை காணும்தேவன் நீரே

3. என் தாயின் கருவில் கண்டவரே

வினோதமாக என்னை படைத்தவரே

நித்திய வழிநடத்தும்,

என்னை காணும் தேவன் நீரே

4. வழியில் பள்ளம் கல் கிடந்தாலும்

பாதம் இவைகளில் இடறாமல்

காத்திடும் வல்லவரே

என்னை காணும் தேவன் நீரே

5. செங்கடல் எதிரில் நின்றாலும்

யோர்தான் பொங்கி ஓடினாலும்,

வழி தனை தருபவரே,

என்னை காணும் தேவன் நீரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு