என்னை ஆட்கொண்ட இயேசு என்னோடு இருப்பவரே
சிலுவை அன்பால் மீட்டு என்னை
கிருபையினால் காப்பவரே... - 2
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா... - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா, ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (என்னை...)
ஜீவன் உள்ள தேசத்துக்கு நான் வரவே
ஜீவன் தந்து என்னை மீட்டவரே... - 2
அந்தகார இருளினிலே இருந்து
ஆச்சரிய ஒளிக்கு அழைத்தீர்... - 2
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா... - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா, ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (என்னை...)
இரட்சிப்பின் வஸ்த்திரத்தை உடுத்தி,
நீதியின் சால்வையினால் தரித்தீர் - எனக்கு... - 2
பாவத்துக்கு செத்து நீதிக்குப் பிழைக்கும்
பரிசுத்த வாழ்வு எனக்குத் தந்தீர்... - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா, ஆமேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (என்னை...)
அந்தி சந்தி மத்தியான வேளையிலே
அன்பரே உம்மை நான் துதிப்பேன்... - 2
என் விண்ணப்பம் உமக்குத் தூபமாகும்
என் கையெடுப்பு உமக்கு அந்திபலி... - 2 (என்னை...)