என்ன நான் செய்ய வேண்டும் சொல்லுங்கப்பா- உங்க
ஏக்கத்தை நிறைவேற்றி முடிப்பேனப்பா-2
1. உம் இதயத்தின் எண்ணங்களை
என்னிடத்தில் சொல்லுங்கப்பா-2
தகுதியாய் என்னை மாற்றுங்கப்பா -உங்க
தரிசனம் நிறைவேற உதவுங்கப்பா
2. உம் திட்டங்களை தந்திடுங்க
உம் தீர்மானங்கள் நிறைவேற்றுங்க-2
உடைத்து என்னை உருமாற்றுங்க
உன்னத வேலைக்காக பயன்படுத்துங்க-2