துதிப் பாடல்கள்

எங்கள் தேவாதி தேவனே ராஜாதி

Engal Devaadhi Devanae Raajaadhi

எங்கள் தேவாதி தேவனே ராஜாதி ராஜனே

என்னை ஆளவாரும்

எங்கள் மன்னாதி மன்னவரே மகிமை நிறைந்தவரே

மன்னா எனக்கு தாரும்

வருத்தப் பட்டு பாரம் சுமக்கிறேன் வழியில்லாமல்

நானும் தவிக்கிறேன்

வந்தருள வேண்டும் தேவனே தந்தருளும் தேவ ஆவியே

காற்றும் கடலும் கையை நீட்டி

அடக்கி வைத்தவர் நீரல்லவோ

கடலைப் பிளந்து உலர்ந்த தரையில்

நடக்க செய்தவர் நீரல்லவோ

ஊற்றைப் பிளந்து உமது ஜனத்தின்

தாகம் தீர்த்தவர் நீரல்லவோ

ஆற்றைக் கடந்து அக்கரைக்கு

அழைத்துச் சென்றவர் நீரல்லவோ

சேற்றில் இருந்த என்னைத் தூக்கினீர்

ஆற்றித்தேற்றி அரவணைக்கிறீர்

மாற்று வஸ்திரம் தந்த தெய்வமே

ஊற்றும் உந்தன் தேவ ஆவியே

கோடிக்கணக்கில் செல்வம் இருந்தும்

தேடி வந்தவர்க்கீடாகுமோ

மாடி வீட்டில் மகிழ்ந்திருந்தும்

மன்னவர் சமூகம் போலாகுமோ

ஓடி ஓடி உழைத்துப் பார்த்தும் உன்னத நன்மைக்கீடாகுமோ

நாடி வந்த சொந்தமெல்லாம்

நல்ல தேவனைப் போலாகுமோ

ஆடி அடங்கி வந்திருக்கிறேன்

நாடி நரம்பில் ஜீவன் வேண்டுமே

வாடி வதங்கி சோர்ந்திருக்கிறேன்

பாடிப் பரவசமாக வேண்டுமே

உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை

உந்தன் வல்லமை இறங்கட்டுமே

உறங்கிக் கிடக்கும் உலர்ந்த எலும்புகள்

உயிரடைந்து எழும்பட்டுமே

இயேசு என்னும் நாமம் மாத்திரம்

இதயம் முழுவதும் ஒலிக்கட்டுமே

பேசும் தேவனின் வாக்குத்தத்தம்

ஒன்றுவிடாமல் பலிக்கட்டுமே

பரத்திலிருந்து கரத்தை நீட்டுமே

வரத்தினால் புது பெலத்தை தாருமே

மறத்துப்போன எல்லை யாவுமே

மறுபடியும் உயிர்க்க வேண்டுமே

ஆவி முழுதும் அனலாய் மாறி

அக்கினிக் காற்று வீசட்டுமே

நாவின் கட்டுகள் அறுக்கப்பட்டு

அந்நிய பாஷை பேசட்டுமே

நோயும் பேயும் நொடிப்பொழுதில்

நொறுங்கிச் சிதறி ஓடட்டுமே

வாயும் வயிறும் வல்ல தேவனை

வணங்கி துதித்து பாடட்டுமே

தாயும் தகப்பனும் ஆன தெய்வமே

தாங்கி நடத்தும் அன்பு தெய்வமே

ஏங்கித்தவிக்கும் எங்கள் உள்ளத்தில்

என்றும் தங்கி ஆளும் தெய்வமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு