என்றும் என் இயேசுவின்
பாடுகளைத் தியானிப்பேன் - 2
பாவிகட்காய்ப் பாடுபட்ட
பரிசுத்தரின் பாடுகளை - 2 - என்றும் என்
பரிசுத்த இரத்தமதைப்
பாதகர்க்காய்த் தாம்சிந்தினீர் - 2
பரிதாபமாய்ப் பாடுபட்டீர்
வேதனைகள் மிகவடைந்து - 2
அவனியில் அன்பர்தாமே
அதிகமான அடிகள் பட்டீர் - 2
அன்பின் கயிறுகளால்
சிலுவைதனில் கட்டப்பட்டீர் - 2
பாவங்களுக்குச் செத்து
நீதிக்கு நான் பிழைக்கும்படி - 2
சுவி உம் சாரத்திலே என்
பாவங்களைச் சுமந்தீர் - 2
என் மீறுதலால் காயப்பட்டு என்
அக்கிரமத்தால் நொறுக்கப்பட்டார் - 2
என் சமாதான வாழ்வுக்காய்
ஆக்கினைகளை அடைந்தீர் - 2
என் பாடுகளை ஏற்றுக்கொண்டு
என் துக்கங்களைச் சுமந்தீர் - 2
என்னை நீர் உம்முடைய
தழும்புகளால் குணமாக்குகிறீர் - 2
அசட்டை பண்ணப்பட்டீர்
புறக்கணிக்கப்பட்டீர் - 2
நெருக்கப்பட்டீர் ஒடுக்கப்பட்டீர்
மாம்சமது பிட்கப்பட்டீர் - 2
குற்றமில்லாத மாசற்ற
கிறிஸ்து இயேசுவே நீர் - 2
குற்றவாளியாம் எனக்காய்ப்
பரிதாபமாய் பலியானீர் - 2