என்று மாறுமோ எந்தன் பாரங்கள்
என்று கதறியே நான் நின்று அழுகிறேன் (2)
மனமிறங்கிடும் அப்பா மனமிறங்கிடும்
மனமிறங்கியே என்னை மன்னித்து விடும் (2)
1. கஷ்டங்கள் பட்டேன் நான் வேதனைப்பட்டேன்
கரம்பிடித்தீரே உந்தன் காலை பிடிக்கிறேன் (2)
2. கடன் தொல்லைகள் என் கழுத்தை நெரித்ததே
கர்த்தர் ஒருவரே என்னை மீட்டெடுத்தீரே (2)
3. நேசித்தோரெல்லாம் என்னை தூசித்தபோது
நேசர் ஒருவரே என்னை காத்து வந்தீரே (2)
மனமிறங்கிநீர் அப்பா மனமிறங்கிநீர்
மனமிரங்கியே என்னை மன்னித்து விட்டீர்