ஏந்தினார் தூக்கினார்
சுமந்துகொண்டார் - 2
என் உள்ளத்தில் உள்ள வேதனை
யாருமே அறியாதது
இதயத்தில் உள்ள ஏக்கங்கள்
எவருக்கும் புரியாதது - 2
1. தாய் தந்தை வெறுத்து - நான்
வாடி நின்றேனே வாடாதே என்று
என்னை வாழவைத்தாரே - 2
2. உறவினர் உதவிடுவார் - என்று
நினைத்தேனே உதறி தள்ளப்பட்டு
தெருவில் நின்றேனே - 2
3. நன்பரெல்லாம் நன்மை செய்வார்
நம்பியிருந்தேனே
நாதியற்ற வேளையிலே உதவவில்லை -2
4. உண்மையுள்ள தேவன் (இயேசு)
எனக்கு நன்மை செய்தாரே
எந்நாளும் அவரை நான் பாடிடுவேனே -2