எந்தன் வாழ்வின் ஏக்கமே
உந்தன் சித்தம் செய்வதே – 2
என்னுடையவரே நான் உம்முடையவளே – 2
என் எதிர்காலம் உம் கைகளில்
தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில்
தந்தேன் – 2
1. எனக்காக நீர் வைத்துள்ள
திட்டங்கள் பெரியதே – 2
அவை நான் அறிந்துகொள்ள
உந்தன் ஆவி போதுமே – 2
என் எதிர்காலம் உம் கைகளில்
தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில்
தந்தேன் – 2
2. என் தேவைகளெல்லாம் அறிந்தவரே
என் இதயம் புரிந்தவரே
முடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலே
உம்மை மகிழ செய்யவே
என் எதிர்காலம் உம் கைகளில்
தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில்
தந்தேன் – 2