எந்தன் உள்ளத்திலே வாழ்பவரும் நீரே
என்னை நாள்தோறும் காப்பவரும் நீரே - 2
என்னை அன்போடு அணைப்பவர் நீரே - 2
அன்பு நிறைந்தவரே - 3
வெண்மையும் சிகப்புமான அழகு கொண்டவரே
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவரே - 2
நீர் காட்டு மரங்களில் கிச்சிலி போன்றவர் - 2
திராட்சை ரசம் பார்க்கிலும் மதுரமானவரே
இனிமையானவரே - 2
வாரும் எந்தன் நேசரே வயல்வெளி செல்வோம்
ஆடிப்பாடி ஆர்ப்பரித்தே ஆனந்தம் கொள்வோம் - 2
நீர் என்னோடு தங்கியிரும் ராஜா - 2
சாரோனின் ரோஜா - 3
ஆதியிலே வார்த்தையாக இருந்தவர் நீரே
என்னை மீட்க மாம்சமாகி இறங்கி வந்தீரே
நீர் ஆதி அந்தம் இல்லாத தேவன் - 2
அல்பா ஒமேகாவே எங்கள் ராஜாவே
இயேசு ராஜாவே நீரே அல்லேலூயா - 2