எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
எந்நாளும் சொந்தம் அவர்
துதி ஒன்றே எந்தன் நெஞ்சில்
எந்நாளும் தங்கும் - அல்லேலூயா - 4
வானங்கள் மாறிடும் பூமியும் ஒழிந்திடும்
வல்லவர் இயேசு என்றும் மாறாதவர்
எனக்காய் சிலுவையிலே ஜீவனை தந்தவர்
எந்நாளும் என் மனதில் வாசம் செய்பவர் - 2
வாழ்வே துயரமாய் மாறிடும் வேளையில்
துணையாய் தொடர்ந்து வந்து துயர் தீர்ப்பவர்
மாறாத கிருபையால் தினமும் நிரப்பியே .
தன் மார்பில் பிள்ளை போல அணைத்துக் கொள்பவர்
என்னை , எந்நாளும் கண்மணிபோல் காத்துக் கொள்பவர்