துதிப் பாடல்கள்

எந்தன் தயவே உம்மை நான் மறவேன்

Endhan Thayavae Ummai Naan Maraven

எந்தன் தயவே உம்மை நான் மறவேன்

எந்தன் உறவே உம்மை பாடுவேன்

நீரே என் கோட்டை

நீரே என் தஞ்சம்

நீர் எந்தன் மறைவிடமே

நீர் எந்தன் உறைவிடமே.

உம்மிடம் வந்தேனே ஐயா

அணைத்துக் கொண்டீரே

உந்தன் அணைப்பில் நான் மகிழ்வேனே

என்னுயிர் நீரே ஐயா

பாரங்கள் நீக்கினீரே ஐயா

நோய்களும் அகற்றினீரே

சிறகின் மறைவில் நான் இருப்பேனே

என் உயிர் நீரே அய்யா

உன் கரம் பிடித்தேனே ஐயா

நிம்மதி அடைந்தேனே

உந்தன் வழியில் நான் நடப்பேனே

என் உயிர் நீரேஅய்யா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு