எந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
உம்மில் வாஞ்சை கொண்டு வாடுதே
எந்தன் உள்ளம் எந்தன் உள்ளம்
உம்மில் தாகம் கொண்டு பாடுதே
எந்தன் கண்கள் உம்மைக் காணும்
அந்த நாளை எண்ணி ஏங்குதே - 2
எந்தன் நாவும் உம்மை போற்றும்
நல்ல பாடல் பாட சொல்லுதே
1. என் ஜீவன் பெரிதல்லவே
நாதா உம் கிருபை விளங்க
எந்நாளும் எந்தன் உதட்டில்
உம் நாமம் பிறந்திடுமே - 2
உந்தனின் திரு சித்தமே
வாழ்வெல்லாம் நினைவானதே
நித்தமும் திரு வார்த்தையால்
ஆத்துமா ஆனந்திக்குமே - 2
2. சோர்ந்திடும் நேரத்திலுமே
ஸ்தோத்திர கரம் எடுப்பேன்
நடு நிசி நேரம் ஆனாலும்
நாதா உம் பாதம் பணிவேன் - 2
என்றும் துணையானீரே
ராப்பகல் உம் நினைவே
அடிமையை உம் பாதையில்
அனுதினம் நடந்திடுமே! - 2