எந்த வழியிலும் என்னை உயர்ந்த
வல்லமை உள்ளவரே
இந்த வழிதான் என்று நினைக்க
என்னால் முடியவில்லையே
எதையும் எப்படியும் எனக்காய் நீங்க செய்வீரே
எதையும் எப்படியும் எனக்காய் செய்ய வல்லவரே
1. பூமியை பார்க்கிலும் வானங்கள்
எத்தனை உயரமாய் இருக்கின்றதோ
அப்படியே உம் வழிகளெல்லாம்
மிகவும் உயரமாய் இருக்கின்றதே-2
எந்தன் நினைவுகள் வழிகள் எல்லாம்
உம்மோடு ஒப்பிடவே முடியாதைய்யா-2 எதையும் எப்படியும்
2. பிள்ளையே இல்லா நேரத்தில்
அநேக சந்ததிக்கு தகப்பனாக
ஆபிரகாமை நியமித்திரே
ஆசீர்வதித்து உயர்த்தினீரே-2
இல்லாதவைகளை இருப்பதைப் போல
அழைக்கும் தெய்வம் நீர்தானையா-2 எதையும் எப்படியும்
3. எதிரி படைகள் சூழ்ந்தனரே
எதிர்த்து நிற்க பெலன் இல்லையே
யோசனை செய்து துதித்தாரே
யோசபாத்து ஜெயித்தாரே-2
பாடினதாலே படைகளை வென்ற
படைகளின் ஆண்டவர் நீர்தானையா-(பாட்டு) -2
எதையும் எப்படியும்