துதிப் பாடல்கள்

எனக்கு எல்லாம் நீங்க தான்

Enakku Ellaam Neenga Thaan

எனக்கு எல்லாம் நீங்க தான்

எல்லாமும் நீங்க தான்

இயேசு ராஜா எல்லாம் நீங்க தான்

கண்ணீரின் பாதையிலே நடந்தேன்

தாங்காத வேதனையில் அலைந்தேன்

துன்பம் மாற்றி தூக்கி விட்டீங்க

புதிய பாதையிலே நடத்தி வந்தீங்க

ஆவியிலே பெலனின்றி கிடந்தேன்

ஆத்துமாவில் சோர்ந்துபோய் அழுதேன்

ஆறுதல் தந்து தேற்றி விட்டீங்க

அடைக்கலமாக அணைத்துக்கொண்டிங்க

மரணத்தின் ஓரத்திலே நடந்தேன்

பயத்தோடு பரிதவித்து கிடந்தேன்

மரண பயத்தை எல்லாம் நீக்கி விட்டீங்க

மாறாத புது பெலனால் நிரப்பி விட்டீங்க

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு