எனக்கொரு நேசர் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
எனக்கொரு புகலிடம் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அன்பு நிறைந்தவர்
என் வேதனைகளை அவர் பார்க்கிறார்
என் கண்ணீரையும் அவர் காண்கிறார்
ஏற்ற நேரத்தில் பதிலை தருகிறார்
அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்
அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே
ஏற்ற நேரத்தில் சுகத்தை தருகிறார்
அவர் இடது கை என் தலையில் கீழிருக்கும்
அவர் வலது கரத்தினால் என்னை அணைத்துக் கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் ஆறுதல் செய்கிறார்
என் அலைச்சல்களை அவர் அறிகிறார் (பார்க்கிறார்)
என் கண்ணீர் கணக்கிலே வைத்துக் கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் உதவி செய்கிறார்
கர்த்தருக்காக நீ பொறுமையாயிரு
அவர் கரத்தினால் அடங்கியிரு
ஏற்ற நேரத்தில் உயர்த்திடுவார்