துதிப் பாடல்கள்

எனக்கா இத்தன கிருபை

Enakkaa Ithana Kirubai

எனக்கா இத்தன கிருபை

என்மேல் அளவற்ற கிருபை - 2

என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்

என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே

என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்

என்ன மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே

(என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும்

என்ன மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே)

அல்லேலுயா உங்க கிருபை போதுமே...

உங்க கிருபை என்னை வாழ வைத்ததே

உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே

உங்க கிருபை என்னை வாழ வைத்ததே

உங்க கிருபை என்னை பாட வைத்ததே

1. பயனற்ற நிலத்தைப்போல மறக்கப்பட்டவன்

நான் அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான் -2

தரிசான என்னில் தரிசனத்தை வைத்து

அறுவடையை துவக்கி வைத்தவரே

2. தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன்

நான் வாழ்ந்திடும் நோக்கம்தனை

இழந்து போனவன் நான் (2)

அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி

அற்புதங்கள் செய்ய வைத்தவரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு