துதிப் பாடல்கள்

என் இயேசு பெரியவர் என்னோடு

En Yesu Periyavar Ennodu

என் இயேசு பெரியவர்

என்னோடு இருப்பவர்

எந்நாளும் எந்தனையே

கலங்காமல் காப்பவர்

நன்றி சொல்லி பாடிடுவேன் ,

நாள்தோறும் துதித்திடுவேன் - 2

உயர்த்திடுவேன் அவர் நாமம்

புகழ்ந்திடுவேன் தினந்தோறும் .

வேதாளம் பாதாளம்

யாவையுமே ஜெயித்தவர் - 2

பாவியான் என்னை

மீட்க பரலோகம் துறந்தவர் - 2

அதிகாலை விழித்திடுவேன்

ஆண்டவரைத் துதித்திடுவேன்

இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி

இரட்சகரை தொழுதிடுவேன் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு