துதிப் பாடல்கள்

என் பிள்ளையே என் பிள்ளையே

En Pillaiyae En Pillaiyae

என் பிள்ளையே என் பிள்ளையே என் குரல் கேளாயோ

உன் உள்ளமே உன் உள்ளமே எனக்குத் தாராயோ

உன்னை அள்ளியே ஏற்றுக்கொள்ளவே என் நெஞ்சம் துடிக்கின்றதே

உன் உள்ளிலே வாசம் செய்யவே ஆசை கொள்கிறதே

உன்னைத் தேடியே உன்னைத் தேடியே நானே வந்தேனே

உன்னை நேசித்தேன் உன்னை நேசித்தேன் என்னையும் விடவே

நீ வாழவே நீ வாழவே என்னுயிர் தந்தேனே

நீ ஆளவே அரசாளவே நான் முள்முடி சுமந்தேனே

உந்தன் அன்பினால் உந்தன் அன்பினால் என்னை வென்றீரே

உந்தன் தியாகத்தால் உந்தன் தியாகத்தால் என்னை மீட்டீரே

என் நெஞ்சமே என் நெஞ்சமே உமக்கு சொந்தமே

உம்மைப் பாடவே உம்மைப் பாடவே நான் என்னையே தந்தேனே

என் மீட்பரே என் நேசரே நன்றி சொல்கின்றேன்

என் தந்தையே என் தெய்வமே உம்மை நேசிக்கிறேன்

உம்மைப் போலவே நான் வாழவே உம் கிருபை தந்திடுமே

உம்மை பாடவே உம்மைப் பாடவே நான் என்னுயிர் தந்தேனே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு