துதிப் பாடல்கள்

என் நேசர் வாயின் முத்தத்தால்

En Nesar Vaayin Muthathaal

என் நேசர் வாயின் முத்தத்தால் முத்தமிடுவாரே

என்னை ரூபவதி பிரியம் என்பாரே

அவர் இடதுகை என் தலையை தாங்குமே

அவர் வலக்கரமும் என்னை அனைக்குமே ஆ . ஆ . . .

என் நேசர் வெளிமான் போல

என் அன்பர் மான்குட்டி போல

மலை மேல் துள்ளியும் குதித்தும்

என் நேசர் எனைத் தேடி வந்தார்

மாரிகாலம் கடந்து சென்றது

மரங்களில் மலர்கள் பூத்தது

குருவிகள் பாடல் பாடுது .

புறாவின் சத்தம் கேட்குது

அத்திமரம் காய்த்து - திராட்சை

பூத்துக் குலுங்கும் காலம் வந்தது

என் நேசர் மேகமீதில் - என்னை

அணைக்கும் நேரம் வந்தது

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு