என் நெஞ்சமே உம்மைப் பாடும்
என் உள்ளமே உம்மை தேடும்
என் வாழ்வில் ஆனந்தமே - 2
கருவில் என்னை தெரிந்தெடுத்து
கரத்தில் ஏந்தி காத்து வந்தீர்
காலமெல்லாம் என்னை நடத்தி
துன்பநிலை மாற்றினீர்
உம்மையன்றி உலகில்
வேறு எவரும் இல்லை
எனக்கு நாதா உம்மாலன்றி
என்னை காக்க யாருண்டு உலகில்
பாசம் வைத்து நடத்தி வந்தீர்
பரனே உம்மை எப்படிப் புகழ்வேன்
நேசத்துடன் அனைத்து காத்தீர்
நாதா உன் கரத்தில்
என்னைத் தந்தேன் உமக்கு தேவா
எந்த நிலையிலும் துதி செலுத்திடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்