துதிப் பாடல்கள்

என் கண்மணி என் கண்ணின் மணியாக

En Kanmani En Kannin Maniyaaga

என் கண்மணி என் கண்ணின் மணியாக நீ

என் உள்ளம் தேடிடும் உன் கண்ணில் நீரும் ஏன் இனி

யார் என்ன சொன்னாலும் இனி எந்தன் பிள்ளையாக நீ

வேறென்ன வந்தாலும் என் அன்பில் சிரிப்பாய் இனி

மண்ணில் பிறந்து வாழும்போது

வாழ்க்கை கதை தெரியாதா

வந்து போகும் துன்பம் எல்லாம் ஒரு நாளில் தீராதா

பூத்துக் குலுங்கும் பூக்கள் கூட மறு நாளே வாடாதா

வாடிப்போகும் வழி இருந்தாலும் புதுப்பூக்கள் பூக்காதா

போராடும் நெஞ்சே இளம்பிஞ்சே நீயும் கலங்காதிரு

ஏன்இந்த வாழ்க்கை என்று சோகம் கொண்டு திகையாதிரு

கல்வாரி காட்சியை கண்முன்னே நிறுத்திடு

உன்மீது உறுத்திடும் பாரத்தை மறந்திடு

கண்ணமதில் கைகளை வைத்து கலங்கிடும் கண்மணியே

கவலை என்ன கறைந்து போகும் கலங்காதே என்னுயிரே

வணங்கிடும் கர்த்தர் உன்னை வாழவைப்பேன் எந்நாளும்

உயிர்மூச்சு உன்னைக்காக்க உறங்காமல் கண்தேடும்

ஓயாமல் வீசும் புயல் காற்றும் உந்தன் நெஞ்சினிலா

வாராமல் வந்த பெரும் சோகம் உன்னை உருக்கிடுதா

தா உந்தன் வேதனை நான் வாங்கிக்கொள்கிறேன்

தாயாகி நான்உனை என் தோளில் சுமக்கிறேன்

அன்றியும் என் தீர்மானத்தில் அழைக்கப்பட்ட உந்தனுக்கு

சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்குமென்று தெரியாதா?

அந்தப்படியே ஆவியானவர் உந்தனுக்காய் எந்நாளும்

வாக்குக்கடங்கா பெருமூச்சோடு

வேண்டிக்கொள்வார் புரியாதா?

உன்னை முன் குறித்தேன் பின்பு அழைத்தேன் நீதிமானாக்குவேன்

என்னோடு இணைத்து மகிமை கொடுத்து

தேவ சாயலாக்குவேன்

நான் உந்தன் கூடவே இருக்கின்ற போதிலே

வேறெந்த ஆயுதம் வாய்க்காதே போகுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு