துதிப் பாடல்கள்

என் கன்மலையும் என் கோட்டையும்

En Kanmalaiyum En Kottaiyum

என் கன்மலையும், என் கோட்டையும்,

என் இரட்சகருமானவர்.

என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிப்பார் - 2 இயேசு

1. நான் நம்புகின்ற துருக்கமும்,

நான் நம்புகின்ற என் கேடகமும்

என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிப்பார் - 2

2. என் இரட்சண்ணியக் கொம்பும்,

என் உயர்ந்த அடைக்கலமும்,

என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிப்பார் - 2

3. ஸ்துதிக்குப் பாத்திரரும்,

என் இரட்சகருமானவர்;

சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிப்பார். -2

4. மரணம் என்னை தொடர்ந்தாலும்

துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்தாலும் -2

தீங்ககை நீக்கி என்னை அவர் இரட்சிப்பார். -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு