என் கண்கள் உம்மை காணும்
என் காதுகள் உம்மை கேட்கும்
என் நாவு உம்மை பாடும்
என் இதயம் தியானிக்கும்
1. கைகள் கிரியை செய்யும்
உம் நாமம் உயர்ந்திட
கால்கள்; சுற்றி திரியும்
உம் நாமம் அறிவிக்க
உம்மை ஸ்தோத்தரிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன்
2. உதடு உம்மை போற்றும்
என்றும் உம்மை துதித்திடும்
நடைகள் உறுதிப்படுமே – உம்
வார்த்தையில் நிலைத்திடும்