துதிப் பாடல்கள்

என் தேவனே என் தந்தையே

En Devanae En Thandhaiyae

என் தேவனே என் தந்தையே

நான் உம்மைத் தேடியே அலைந்தேனே -2

1. பாவியாய் இருந்தேன் பாவத்தில் மரித்தேன்

பரனை அறியாமலே -2

மரணத்தின் வழியில் மதிகெட்டு நடந்தேன் -2

மன்னவா உம்மையும் தேடச்செய்தீரே -2

2. என் சிருஷ்டிகரே நான் உலகினில் உம்மை

தேடியே அலைந்தேனே -2

உம்மைக் காணாமல் உயிரை யான் தெஜிக்க -2

துணிந்ததோர் வேளை என்னை சந்தித்தீரே -2

3. கடினத்தை மாற்றி காரிருள் போக்கி

கருணையாய் சந்தித்தீரே -2

வல்லமையைக் காண்பித்து வல்லமையால் நிறைத்து - 2

உம்மைக் காண்பிக்கச் சித்தம் கொண்டீரே -2

4. சிலுவையில் தொங்கி சிலுவையில் மாண்ட காட்சியளித்தீரே

பாவத்தைப் போக்கி சாபத்தை நீக்கி -2

என்னை இரட்சித்து ஏற்றுக் கொண்டீரே -2

5. தரிசனம் தந்து தரிசிக்கச் செய்தீர்

தரணியில் அடியானை -2

சமாதானம் அளித்தீர் சந்தோஷம் அளித்தீர் -2

அளவில்லா ஆசீர்வாதம் அளித்தீர் -2

6. தேடு கண்டடைவாய் தேடு பிழைப்பாய்

என்று மொழிந்தவரே -2

வாக்குத்தத்தங்களை நிறைவேறச் செய்யும் -2

வாக்கு மாறாத தேவா நான் மறவேன் -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு