என் தேவா என் தேவா
நான் உள்ளம் உருகி பாடுகிறேன்
பாடுகிறேன் என் தேவா
நான் உய்யும் வழியை தேடுகிறேன்
தேடுகிறேன் என் தேவா
குடிசையில் இருந்து துடிக்கின்றேன்
என் குறைகளை சொல்லி அழுகின்றேன் - (2)
இருளிலிருந்து அழைக்கின்றேன் - (2)
என் தேவா ஒலியை தந்திடுவாய்
ஏழை என்னை காத்தருளும்
என் ஏழ்மை நிலையை பார்த்தருளும்
தேவா எனக்கு இரங்கிடுவாய் - (2)
நீ இரக்கம் காட்டி துணை புரிவாய்
பாவி நான் உம்மை கூப்பிட்டேன்
நீர் என் மேல் கிருபை காட்டும் ஐயா
நாதா எனக்கு அருள் புரிவாய் - (2)
என் வேதனை யாவும் நீக்கிடுவாய்.