என் ஆன்மா ஆண்டவரை
ஏற்றி என்றும் போற்றுகின்றது
என் மீட்பராம் இரட்சகரில்
எந்தன் ஆவியும் மகிழ்கின்றது
- என் ஆன்மா
தாழ்வில் அடிமையை நோக்கினாரே
வல்லவர் மகிமையை செய்தாரே
அவர் திருநாமம் பரிசுத்தமே
அவர் என்றென்றும் சிறந்தவரே
- என் ஆன்மா
தலைமுறை தலைமுறை அவர் இரக்கம்
அவருக்கு அஞ்சுவோர்க்கு என்றுமிருக்கும்
பசித்தோரை நன்மையால் நிரப்பிடுவார்
தாழ்ந்தவரை என்றும் உயர்த்திடுவார்
- என் ஆன்மா