எல்லாம் நீ இயேசுவே
என் உயிரும் நீ இயேசுவே
என் வாழ்வு நீ இயேசுவே
பொல்லாத உலகில் பொருள் ஏதும் வேண்டாம்
பரம் பொருள் நீ இயேசுவே
பாவியாய் நான் அலைந்தேன்
பாதை தடுமாறினேன் - 2
பாவ உலகில் பாவியை மீட்க
பரிகாரம் நீ இயேசுவே
திக்கற்று நான் திரிந்தேன்
தீர்வையை நான் மறந்தேன்
தாவீதின் வேரும் தேவ மைந்தனும்
தயவும் நீ இயேசுவே
மதியினை நான் இழந்தேன்
மனம் நொந்து நான் அழுதேன்
மன்னாதி மன்னன் மனதுருகும்
மனுமகன் நீ இயேசுவே