துதிப் பாடல்கள்

எல்லா நாமத்திலும் நீர்

Ellaa Naamathilum Neer

எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்

எல்லா தேவரும் பெரியவர்

சர்வ சிருஷ்டி கெல்லாம் நீர் அதிபதி

சர்வ லோகத்திற்கும் ஆண்டவர் -2

நீரே தெய்வம் வேறு இல்லை

உம்மை போல இங்கு யாரும் இல்லை -2

1.கர்த்தருக்காய் பொறுமையுடன் காத்திருப்பேன்

அவர் என்னிடம் சாய்ந்து என் குரல் கேட்பார் -2

என் தேவனுக்கு புதுப்பேட்டை பாடிடுவேன் ( காட்டிடுவேன்)

என் தேசம் அதை கண்டு அவரை துதித்திடும் ( நம்பிடும்) -2

2. சிறுமைப்பட்ட என் மேல் அவர் சிந்தை வைத்தார்

என் வறுமைகளை மாற்றி என்னை வாழ வைத்தார் -2

என் பாவங்கள் அனைத்தையும் கழுவி விட்டார்.

என் மீறுதல்கள் அனைத்தினின்றும் மீட்டிட்டார் -2

3.தேவனே உம் விருப்பம் செய்ய விரும்புகிறேன்

உம் மகிமை காண தினம் ஏங்குகிறேன் -2

மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே அழைத்து செல்லும்

உம் மகிமைக்குள் தினம் என்னை வாழ செய்யும் -2

4. நீதியின் வலதுகரத்தினால் தாங்குகிறீர்

நித்தமும் நீர் என்னை நடத்துகிறார் -2

ஏனோக்கைப் போல நான் நடந்திடுவேன்

என்னை எடுத்துக்கொள்ளும் வரை சஞ்சரிப்பேன் -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு