எக்காளம் தொனிக்கையிலே
நம் இயேசு வரப்போகிறார்
எங்க இராஜா இயேசு இராஜா
வேகமாய் வரப்போகிறார்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – நம்ம
இயேசு இராஜா வாழ்க வாழ்கவே
1.பரிசுத்தமாகிறவன் பரிசுத்தமாகட்டுமே
பாவம் செய்கிறவன் பாவம் செய்யட்டுமே
நியாயம் தீர்க்க எங்கள் இராஜா
சீக்கிரம் வரப்போகிறார்
நியாயம் தீர்க்க எங்கள் இராஜா
வேகமாய்; வரப்போகிறார்
2.இயேசுவின் வருகைக்காக நாமும் காத்திருப்போம்
ஆவியின் கனிகளிலே நிறைந்து வாழ்ந்திடுவோம்
மறுரூபமாக்கிட மகிமையில் சேர்த்திட
சீக்கிரம் வரப்போகிறார்
மறுரூபமாக்கிட மகிமையில் சேர்த்திட
வேகமாய்; வரப்போகிறார்
3.பரிசுத்தவான்களுடன் நாமும் வாழ்ந்திடுவோம்
பரலோக தூதருடன் பாடி அக மகிழ்வோம்
அல்லேலூயா அல்லேலூயா
இயேசுவுக்கே மகிமை
அல்லேலூயா அல்லேலூயா
தேவனுக்கே மகிமை