எதுவரைக்கும் என்னை மறந்திருப்பார் -ஐயா
எதுவரைக்கும் எனக்கு உம்மை -மறைப்பர்
எளியவன் என் குரல் கேட்கலையா?
என்னிடம் உமக்கு அன்பில்லையா - (எது வரைக்கும்)
1. கானகத்தில் நான் நடக்கின்றேன் (வாழ்வில்)
கருணை இல்லாமல் தவிக்கின்றேன்
காப்பாற்ற முன் வாரும் - கர்த்தாவே - உம்
கருணை புரிந்து கரையேற்றும் - (எது வரைக்கும்)
2. அன்பு இல்லாமல் அலைகின்றேன்
ஆறதல் இன்றி தவிக்கின்றேன்
அன்பான இயேசய்யா அனணத்திடவாரும்
துன்பத்திலிருந்து என்னை தேற்றிவிடும் - (எது வரைக்கும்)
3. பாசம் இல்லாமல் வேஷமானேன்
பக்தி இல்லாமல் -சாபமானேன்
இறைவா என் மீது இறங்கிடுமே
என் இதயத்தில் வந்து வாழ்ந்திடுமே - (எது வரைக்கும்)