தேவனைப் போற்றிப் பாடுங்கள் பாடுங்கள்,
ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
(இயேசு ஒருவரே தெய்வம் அவரைப் போற்றிப் பாடுங்கள்)
பூமியனைத்திற்கும் ராஜா அவரைப் போற்றிப் பாடுங்கள். (சங் 47:6)
பாடுங்கள் பாடுங்கள் இயேசுவை பாடுங்கள் பாடுங்கள்
போற்றுங்கள் போற்றுங்கள் ராஜனை போற்றுங்கள்
பூமியனைத்திற்கும் ராஜா அவரைப் போற்றிப் பாடுங்கள்.
1. ஜனங்களே பிரபுக்களே அவரை பாடுங்கள் பாடுங்கள்
சிறியோரே பெரியோரே அவரை பாடுங்கள் பாடுங்கள்
பூமியனைத்திற்கும் ராஜா அவரைப் போற்றிப் பாடுங்கள்.
2. அழகில் சிறந்தவரை போற்றி பாடுங்கள் பாடுங்கள்
அறிவில் சிறந்தவர் போற்றி பாடுங்கள் பாடுங்கள்
பூமியனைத்திற்கும் ராஜா அவரைப் போற்றிப் பாடுங்கள்.
3. வானங்களே களித்துப் பாடுங்கள் பாடுங்கள்
பூதலத்தின் தாழ்விடமே அவரை பாடுகள் பாடுங்கள்
இயேசு கிறிஸ்துவே ராஜா அவரைப் போற்றிப் பாடுங்கள்