தேவாதி தேவன் தேற்றிடும் இயேசு
தேடி வருகின்றார் - நம்மை
நாடி வருகின்றார் - நம்ம - 2
அவர் நல்ல மேய்ப்பரே
நம்மை எந்நாளும் காப்பாரே - 2
பாவம் போக்க ஒரே வழி இயேசு தான் பரலோகம் போக ஒரே வழியும்
இயேசு தான் - 2
1. அவர் நல்லவர் வல்லவர்
கிருபையுள்ளவர் வாக்கு என்றும் மாறாத
தேவன் அவரல்லவா - அவர்
நமக்கு எல்லாம் சொந்தமல்லவா - 2
மரித்த மூன்றாம் நாளில் எழுந்த
தேவன் யார் - இன்றைக்கு
கல்லரை திறந்திருக்கு
யோசித்துபார் - 2
2. அவர் உனக்காய் எனக்காய்
மரித்து மூன்றாம் நாளினிலே எழுந்த
இயேசு இராஜன் அவரல்லவா - அவர்
நமக்கு எல்லாம் சொந்தமல்லவா - 2
3. அவர் கவலை கலக்கம்
போக்கி நமக்கு உதவி செய்ய வந்த
இயேசு ராஜன் அவரல்லவா - அவர்
நமக்கு எல்லாம் சொந்தமல்லவா - 2