துதிப் பாடல்கள்

அழைப்பவர் இயேசு அவரிடம்

Azhaippavar Yesu Avaridam

அழைப்பவர் இயேசு அவரிடம் பேசு

அச்சம் என்ன பயம் என்ன அந்தப் பக்கம் வீசு

உயிர் தரும் மூச்சு உடன் வரும் பேச்சு

ஆண்டவர் படைப்பினில் அதிசயம் ஆச்சு

அழுதிடும் குழந்தைக்கு பால் கொடுக்கும்

அன்புத் தாய்க்கு ஈடுஇணை எதுவாகும்

அதைவிட ஒருபடி மேலாகும்

நம் ஆண்டவர் கருணையும் அதுவாகும்

செய்திடும் செயல்களைச் சிறந்திடச் செய்

வரும் சுமைகளை எல்லாம் அவரிடம் வை

விழுந்திட விழுந்திட எழுந்திடச் செய்

உன்னைத் தாங்கிட இருகரம் இருக்குது மெய்

முதலென்றும் முடிவென்றும் முக்கனிச்சுவையென்றும்

எதிலொன்றும் இயங்கிய ஜீவன் அவர்

எங்கள் தேவன் அவர்

ஆண்டவரை நாடிடுவோம் அல்லேலுயா பாடிடுவோம்

அவரிடம் குறைகளைக் கூறிடுவோம்

அவர் புகழினைப் பாடி மகிழ்ந்திடுவோம்

அலைகடல் மீதினில் நடந்தவரே

அன்று ஆயிரம் தடைகளைக் கடந்தவரே

ஆத்தும தரிசனம் தருபவரே

தூய ஆவியில் எப்போதும் நிறைந்தவரே

வணக்கத்திற்குரிய வாரிசவர்

எந்த நெருக்கத்திலும் எங்கள் நேசரவர்

தனக்கென்று எதுவுமே வைக்காமலே

தந்த தயவுள்ளம் கொண்ட நம் தேவனவர்

குறைவொன்றும் இல்லாத நிறைவொன்றை உண்டாக்கும்

நித்திய ஜீவனின் தந்தை அவர் எங்கள் சிந்தை அவர்

கேளுங்களேன் கொடுத்திடுவார்

தட்டுங்கள் அப்போது திறந்திடுவார்

தேடுங்கள் எல்லாமே கிடைக்கும் என்றார்

நம் தேவனின் நீதியை ராஜ்ஜியத்தை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு