அழகுமில்லை
சௌந்தர்யமுமில்லை - ஐயா
எனக்காய் அழகை இழந்தீர்
1.முள்ளினால் வந்த
முன்னோரின் சாபத்தை - 2
முள்முடி தாங்கி முறித்தீர்
முற்றிலுமாக -2 - அழகுமில்லை
2. என்னை உயர்த்த
உம்மைத் தாழ்த்தினீர் - 2
என் பாவம் போக்க
பாவமானீர்- 2 - அழகுமில்லை
3.சிலுவை மரத்தில்
எனக்காய் தொங்கினீர் - 2
என் சாபம் போக்க
சாபமானீர் - 2 - அழகுமில்லை
4.என் மீறுதலுக்காய்
காயங்கள் ஏற்றீர் - 2
என் அக்கிரமங்களால்
நொறுக்கப் பட்டீர் - 2 - அழகுமில்லை
5.கசையடி பட்டீர்
காடியைக் குடித்தீர் - 2
கசப்பான என் வாழ்வை
மதுரமாக்கினீர் - 2
அழகுமில்லை
சௌந்தர்யமுமில்லை - ஐயா
எனக்காய் அழகை இழந்தீர் அழகுமில்லை
சௌந்தர்யமுமில்லை - ஐயா
எனக்காய் அழகை இழந்தீர் - 2
இயேசய்யா
எனக்காய் அழகை இழந்தீர்..