அப்பா அப்பா உம்மை நினைத்து ஏங்குகிறேன் நான்
ஆனந்தத்தில் எந்நாளும் மகிழ்கிறேன்
நீர் உயர்ந்தவர் என்று என் உள்ளம் சொல்லுது
நீர் பெரியவரென்று என்னைப் பாடவைக்குது - அப்பா அப்பா
1. கிருபையின் தேவனே கிரியை செய்தீர்-
என் வாழ்விலே
பாவத்திலே நான் கிடந்தேனே-
நீர் பாசமாய் மீட்டுவிட்டீரே - அப்பா அப்பா
2. சமாதானம் எனக்களித்து சத்தியத்திலே
வாழவைத்தீரே
உம்மைப் போல என்னை மாற்றி
உமதண்டையில் சேர்த்துக்கொள்வீரே - அப்பா அப்பா
3. தாவீதுக்கு இறங்கினீர் சாலமோனை உயர்த்தீனீர்
உம்முடைய வேதத்திலே
எங்களுக்குச் சாட்சியாகவே
உம் நாமத்தை மகிமைப் படுத்தினீர் - அப்பா அப்பா